உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜி.ஹெச்., துாய்மை பணியாளர் 30 பேர் காத்திருப்பு போராட்டம்

ஜி.ஹெச்., துாய்மை பணியாளர் 30 பேர் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், 21 பேர், சரியாக பணியாற்றவில்லை எனக்கூறி, தனியார் ஒப்பந்த நிறுவனம், விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், கடந்த, 24ல் இருந்து, அவர்களுக்கு எவ்வித பணியும் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், துாய்மை பணியாளர்கள், 21 பேரும், மருத்துவ கல்லுாரி முதல்வர் அலுவலகம் முன், திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'பயோமெட்ரிக் வருகை பதிவேடு கொடுக்கப்படும் வரை எங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும்' என தெரிவித்தனர். இவர்களுடன், ஏற்கனவே பயோ மெட்ரிக் வருகை பதிவேடு வழங்காத, 9 துாய்மை பணியாளர்களும், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை