உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தரம் இல்லாத தார்ச்சாலை அதிகாரிகளிடம் வாக்குவாதம்

தரம் இல்லாத தார்ச்சாலை அதிகாரிகளிடம் வாக்குவாதம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலையில், சில நாட்களுக்கு முன், 2.6 கி.மீ., துாரத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து முடிந்தது. இதையடுத்து, மலைவாழ் மக்கள், சுற்றுலா பய-ணிகள் பயன்படுத்தி வந்தனர். கடந்த வாரம், தொடர்ந்து கொல்லிமலை முழுவதும் மழை பெய்து வந்தது. இந்த மழையால், மக்கள், சுற்-றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், சில நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட தார்ச்சாலை, தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பெயர்ந்து வந்தது.இதையறிந்த கொல்லிமலை வாழ் மக்கள், அங்கு விரைந்து சென்று, புதிதாக போடப்பட்ட தார்ச்-சாலை தரமற்ற முறையில் உள்ளது எனக்கூறி, அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்-டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை