உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 2026ல் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேகம் செய்ய இன்று முன்பதிவு

2026ல் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேகம் செய்ய இன்று முன்பதிவு

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், வரும், 2026ம் ஆண்டுக்கான அபிஷேக முன்பதிவு, இன்று துவங்குகிறது.நாமக்கல் நகரின் மைய பகுதியில், ஒரே கல்லில் செதுக்கபட்ட, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரு-கிறார். இக்கோவிலில், தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு, 9:00 மணிக்கு சுவாமிக்கு, 1,008 வடை மலை சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, நல்லெண்ணெய், தேன், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகி-றது. அதையடுத்து, மதியம், 1:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பா-லிப்பார். ஆஞ்சநேயர் சுவாமிக்கு, தினமும் அபிஷேகம், வடை மாலை அலங்காரம் கட்டளைதாரர்கள் மூலம் நடத்தப்படுகிறது. அதற்காக, ஒரு ஆண்-டுக்கு முன்பே பக்தர்கள் முன்பதிவு செய்வது வழக்கம். பதிவு செய்து பூஜையில் கலந்து-கொள்ளும் கட்டளைதாரர்களுக்கு, அபிஷேகம் முடிவில் பிரசாதம் வழங்கப்படும். அதன்படி, வரும், 2026ம் ஆண்டுக்கான ஆஞ்சநேயர் சுவா-மிக்கு அபிஷேக முன்பதிவு இன்று தொடங்குகி-றது.இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா கூறியதாவது:-வரும், 2026-ம் ஆண்டில், ஒரு நாள் நடக்கும் வடை மாலை அலங்காரம், அபிஷேகத்துக்கு, ஏற்கனவே இருந்தது போல், தலா, 7,000 ரூபாய் வீதம், 6 பேர் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அபிஷேக முன்ப-திவு இன்று தொடங்குகிறது.ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள், கோவில் நிர்வாக அலுவலகத்தில் முழு தொகையையும் செலுத்தினால் மட்டுமே அபிஷேக தேதி முன்பதிவு செய்யப்படும். தங்க கவசம், 5,000 ரூபாய், முத்தங்கி, 3,000 ரூபாய் கட்-டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை