உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பஸ்சை வேகமாக ஓட்டிய டிரைவர் தட்டிக்கேட்ட கண்டக்டருக்கு குத்து

பஸ்சை வேகமாக ஓட்டிய டிரைவர் தட்டிக்கேட்ட கண்டக்டருக்கு குத்து

ப.வேலுார் பஸ்சை அதிவேகமாக ஓட்டியது குறித்து தட்டிக்கேட்ட கண்டக்டருக்கு, டிரைவர் குத்துவிட்டதால், ரத்தம் கொட்டிய நிலையில், பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடைந்தார்.நாமக்கல் மாவட்டம், வையப்பமலையை சேர்ந்தவர் குழந்தைவேல், 52; கண்டக்டர். மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் சிவா, 37; டிரைவர். இருவரும், சேலத்தில் இருந்து கரூர் செல்லும் தனியார் பஸ்சில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று சேலத்தில் இருந்து, தனியார் பஸ் புறப்பட்டு ப.வேலுார் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில், டிரைவராக இருந்த சிவா, பஸ்சை அதிவேகமாக ஓட்டியுள்ளார். இதுகுறித்து பயணிகள், கண்டக்டரிடம் முறையிட்டுள்ளனர். டிரைவர் சிவாவிடம், கண்டக்டர் குழந்தைவேல் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒரு வழியாக, நேற்று மதியம், 1:30 மணிக்கு, ப.வேலுார் பஸ் ஸ்டாண்டிற்கு தனியார் பஸ் சென்றடைந்தது. அங்கு, மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அதில், கண்டக்டர் குழந்தைவேலின் முகத்தில், டிரைவர் சிவா ஓங்கி குத்துவிட்டார். இதில், வலி தாங்க முடியாமல் அலறி துடித்த கண்டக்டர் குழந்தைவேல், ரத்தம் கொட்டிய நிலையில், அருகில் இருந்த ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை