வெண்ணந்துார் அருகே கார்கள் மோதி விபத்து: ஒருவர் பலி
வெண்ணந்துார்: ராசிபுரம், கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் விஸ்வநாதன். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றனர். பின், மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை யுவராஜ், 29, ஓட்டினார். ராசிபுரம், கோனேரிப்பட்டியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினர், சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.இந்நிலையில், ராசிபுரம் அடுத்துள்ள தேங்கல்பாளையம் அருகே, எதிர் எதிரே சென்ற இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. சேலத்தில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த விபத்தில், கோனேரிப்பட்டியை சேர்ந்த சைக்கிள் கடை உரிமையாளர் விஸ்வநாதன் மனைவி மைதிலி, 45, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இரண்டு கார்களில் பய-ணித்த தினேஸ்குமார், கீர்த்தனா, அனிதா மற்றும் ஒரு குழந்தை உட்பட, ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.