உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலையில் கார் கவிழ்ந்து விபத்து

கொல்லிமலையில் கார் கவிழ்ந்து விபத்து

சேந்தமங்கலம், கொல்லிமலை மலைப்பகுதியில், 34வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியை சேர்ந்தவர் அனிதா, 33. இவர் தனது மகன் லட்சுமணன், 10, சகோதரன் மஞ்சுநாதன், 46, ஆகியோருடன் காரில் கொல்லிமலைக்கு நேற்று வந்திருந்தனர். காரை மஞ்சுநாதன் ஓட்டி வந்துள்ளார். 34வது கொண்டை ஊசி வளைவில் ஏறும் போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த மூன்று பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மூவரும் மீட்கப்பட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை