மேலும் செய்திகள்
ஆர்.டி.ஓ., ஆபீசில் தரகர்கள் வீசிய பணம் பறிமுதல்
26-Sep-2024
அருப்புக்கோட்டையில் பட்டா மாறுதலில் வசூல் வேட்டை
25-Sep-2024
ராசிபுரம்: நிலத்தரகர்களை பதிவு செய்து, அரசு உரிமம் வழங்க வேண்டும் என, தமிழக நிலத்தரகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக நிலத்தரகர்கள் சங்க ஆலோசனை கூட்டம், நேற்று புதுச்சத்திரத்தில் நடந்தது. மாநில தலைவர் அண்ணாதுரை, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,''நிலத்தரகர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. பத்திரம் எழுதுபவர்களுக்கு உரிமம் வழங்குவது போல், நிலத்தரகர்களுக்கும் அரசு பதிவு துறையில் உரிமம் வழங்க வேண்டும். நிலத்தரகர்களை, அமைப்பு சாரா தொழிலாளர் நல பட்டியலில் இணைக்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.அதற்கான பணி நடந்து வருகிறது. நிலத்தரகர்களுக்கு தனி நல வாரியம் ஏற்படுத்த வேண்டும. மூத்த தரகர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் மாதம்தோறும், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும்,'' என்றார்.இந்நிகழ்ச்சியில், ராசிபுரம், புதுச்சத்திரம், சேந்தமங்கலம் பகுதிகளை சேர்ந்த நிலத்தரகர்கள் கலந்து கொண்டனர்.
26-Sep-2024
25-Sep-2024