உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரத்தில் காணாமல் போனவர் அடித்து கொலை செய்து உடல் வீச்சு

ராசிபுரத்தில் காணாமல் போனவர் அடித்து கொலை செய்து உடல் வீச்சு

ராசிபுரம், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கோனேரிப்பட்டி, ராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன், 52; இவர், இரண்டு நாட்களுக்கு முன் வீட்டைவிட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்களிடம் விசாரித்தும், லோகநாதன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, லோகநாதனை காணவில்லை என, அவரது உறவினர்கள் அளித்த புகார்படி, ராசிபுரம் போலீசார் அவரை தேடி வந்தனர்.இந்நிலையில், நாமக்கல் அருகே, சேலம்-கரூர் ரோடு நல்லிபாளையம், தாபா அருகே நெடுஞ்சாலைக்கும், சர்வீஸ் ரோட்டுக்கும் இடையில் உள்ள பள்ளத்தில், ஆண் சடலம் ஒன்றை, நேற்று முன்தினம் போலீசார் கண்டுபிடித்தனர். அடையாளம் தெரியாததால், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உடலை வைத்திருந்தனர்.தொடர்ந்து நடத்திய விசாரணையில், ராசிபுரத்தில் காணாமல்போன லோகநாதன் என்பதும், அடித்து கொலை செய்து, நாமக்கல் அருகே உடலை வீசிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றி, ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை