எருமப்பட்டி: கோம்பை பகுதி மக்கள், சாலை வசதி கேட்டு, பொன்னேரி கைகாட்டி சாலையில், இரவு முழு-வதும் கட்டில்போட்டு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டி பஞ்., பொன்னேரி கைகாட்டியில் இருந்து கோம்-பைக்கு செல்லும் மண் சாலை உள்ளது. இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என, கோம்பை பகுதியில் குடியிருக்கும் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், வருவாய்த்துறையினர், இந்த மண் சாலையை அளவீடு செய்தனர். அப்போது, ஆத்து-வாரியாக உள்ளதால், சாலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.சில தினங்களுக்கு முன், வருவாய்த்துறையினர், கோம்பையில் இருந்து சாலையை அளவீடு செய்-தனர். இந்த அளவீடு பணி, 90 சதவீதம் முடிந்த நிலையில், சிறிது துாரம் அளவீடு செய்ய முடி-யாமல் திரும்பி சென்றனர். பின், நேற்று முன்-தினம் தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் மீண்டும் அளவீடு செய்தனர். அப்-போது, அளவீடு செய்யப்படும் சாலையில் ஒரு பக்கம், முட்டுக்கல் இல்லாததால் அளவீடு பணி முடியாமல் பாதியில் நிறுத்தப்பட்டது.இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, கோம்பையை சேர்ந்த கிராம மக்கள், நேற்று முன்தினம் இரவு முழுவதும், துறையூர் மெயின் ரோட்டில், சாலை-யோரத்தில் குழந்தைகளுடன் கட்டில் போட்டு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில், தாசில்தார் வெங்கடேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சு-வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நேற்றும் குழந்தைகளுடன் அப்பகுதி மக்கள், 100க்கும் மேற்பட்டோர் சாலைேயாரத்தில் உள்ள புளிய மரத்தடியில் கட்டிலில் படுத்து போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, நேற்று மாலை, நாமக்கல் ஆர்.டி.ஓ., சாந்தி மற்றும் தாசில்தார் வெங்க-டேசன் உள்ளிட்ட அதிகாரிகள், இடத்தை பார்-வையிட்டனர். பின், 15 நாட்களுக்குள் இந்த பிரச்-னைக்கு தீர்வு காணப்படும் என, அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.