உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரிக்கை

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்ற கோரிக்கை

நாமக்கல், 'வழித்தடம் மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கார்கூடல்பட்டி கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:ராசிபுரம் தாலுகா, கார்கூடல்பட்டி கிராமத்தில், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள வழித்தடத்தையும், நீர்வழிப்பாதையையும் ஆக்கிரமித்து, சிலர் கட்டடம் கட்டி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், விசாரணை மேற்கொண்டு, வழித்தடம் மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை