குமாரபாளையம்: குமாரபாளையம் தாலுகா அலுவலகம் சார்பில், எஸ்.ஐ.ஆர்., ஆலோசனை கூட்டம், நகராட்சி திருமண மண்டபத்தில், தாசில்தார் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இதில், 279 ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அனைத்து கட்சியை சேர்ந்த ஓட்-டுச்சாவடி முகவர்கள், கிராம நிர்வாக அலுவ-லர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்-றனர்.மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்-குமார், ஆலோசனை கூறினார். குமாரபாளையம் தொகுதி முழுதும், 2 லட்சத்து, 61,000 வாக்கா-ளர்கள் உள்ளனர். 90 சதவீதம் பேரிடம், எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள, 10 சதவீத பணிகள் வரும், 11க்குள் நிறைவு செய்து தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 2 லட்சத்து, 61,000 மொத்த வாக்காளர்களில், இறந்தவர்கள், 15,000 பேர், இடமாற்றம், 18,000 பேர் உள்பட, 44,000 பேர் நீக்கம் பட்டியலில் உள்ளனர்.எஸ்.ஐ.ஆர்., பணி, 100 சதவீதம் நிறைவு செய்த, 62 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் ரமேஷ், ஆர்.ஐ., புவனேஸ்வரி, வி.ஏ.ஓ.,க்கள் முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன், தியாகராஜன், தேவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.