உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு

கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை விதைப்பு

ராசிபுரம், தமிழகத்தில், சித்திரை, கார்த்திகை மாதம் என, இரண்டு பட்டத்தில், விவசாயிகள் நிலக்கடலை விதைப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, மானாவாரி வயல்களில் இந்த மாதங்களில் மழை மற்றும் தட்வெட்ப நிலை சரியாக இருப்பதால், பெரும்பாலும் இந்த மாதங்களில் தான் அதிக ஏக்கரில் கடலை பயிரிடுகின்றனர்.சில வாரங்களுக்கு முன், தொடர் மழை பெய்ததால், உழவு பணியை முடித்து நிலத்தை தயார் செய்து வைத்திருந்தனர். கார்த்திகை மாதம் தொடங்கியதும் கடலை விதைப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், பட்டணம், ஆர்.புதுப்பட்டி, அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நிலக்கடலை விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது, மழை தொடர்வதால் விதைப்பு பணி பாதிக்கப்படுவதாகவும், இன்னும் சில நாட்களில் கடலை விவசாயிகள் அனைவரும் விதைப்பு பணியை முடித்து விடுவார்கள் என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை