உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கால்நடை மருத்துவமனை திறப்பு

கால்நடை மருத்துவமனை திறப்பு

திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் திருச்செங்கோடு, ப.வேலுார் பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில், 25 இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை பயனாளிகளுக்கு வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நளினிசுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், கால்நடை மருத்துவமனை மற்றும் திருச்செங்கோடு, ப.வேலுார் பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, 25 இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை