உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் /  மாணவருக்கு அரிவாள் வெட்டு: ராங் கால் பகை காரணமா?

 மாணவருக்கு அரிவாள் வெட்டு: ராங் கால் பகை காரணமா?

ப.வேலுார்: 'ராங் காலில்' ஏற்பட்ட தகராறில், ஐ.டி.ஐ., மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே பாலப்பட்டியைச் சேர்ந்தவர் சபரீஷ், 20; இவர், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில், ஐ.டி.ஐ.,யில் படிக்கிறார். தந்தையை இழந்தவர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான, பா.ம.க., மாவட்ட விவசாய சங்க தலைவர் செல்வம், 49, என்பவரின் பராமரிப்பில் வசிக்கிறார். சில நாட்களுக்கு முன், சபரீஷ் மொபைல் போனுக்கு, ராங் கால் வந்துள்ளது. அதில், மறுமுனையில் பேசியவருக்கும், சபரீஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராங் கால் செய்த நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை, பாலப்பட்டி பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக நின்றிருந்த சபரீைஷ, டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர், அரிவாளால் வெட்டி தப்பினர். ராங் கால் பேசியவரின் கைவரியா என ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை