மேலும் செய்திகள்
கழிப்பிட வசதி இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை
2 minutes ago
ஆபத்தான பாலம்; தடுப்பு அமைத்தால் நலம்
2 minutes ago
ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பெண் செய்த களேபரத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்கிய அரை மணி நேரத்திற்கு பின், 55 மதிக்கத்தக்க பெண் ஒருவர் குறை தீர்க்கும் கூட்டத்திலிருந்து வெளியேறி, கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தார். கையில் வைத்திருந்த மனுவுடன் அரசு அதிகாரிகளை திட்டியவாறு சப்தம் போட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர். அரை மணி நேரம் அங்கும் இங்கும் சென்றவாறு திட்டி கொண்டிருந்தார். 'மன நலம் பாதித்தவராக இருக்கலாம்,' என, கருதிய போலீசார் அமைதியாக இருந்தனர். அங்கிருந்து வெளியேறாததால் மனு அளிக்க வந்த மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அங்கு வந்த இரண்டு பெண் போலீசார் சமாதானம் செய்து அழைத்து செல்ல முயன்றனர். சிறிது நேரம் அமைதியாக பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த பெண், தானாக எழுந்து கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து வெளியேறி சென்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
2 minutes ago
2 minutes ago