உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  தண்ணீர் இல்லாமல் கண்ணீர் தீர்வு; காண கலெக்டரிடம் மனு

 தண்ணீர் இல்லாமல் கண்ணீர் தீர்வு; காண கலெக்டரிடம் மனு

ஊட்டி: இரண்டு மாதங்களாக தண்ணீர் வினியோகம் இல்லாததால் ஆருகுச்சி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ஊட்டி அருகே உள்ள தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆருகுச்சி கிராம மக்கள் கொடுத்த மனு: ஆருகுச்சியில், 40 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடிநீர் ஆதாரமாக கிராமத்தில் ஆழ்துளை கிணறு உள்ள நிலையில் அந்த கிணறு முறையாக புனரமைக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. இதனால், கிராம மக்கள் குடிநீர் இல்லாமல் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவதிப்பட்டு வருகிறோம். தண்ணீர் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்த நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்தும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிராமத்தில் முறையாக தெருவிளக்கு எரியாததால் வன விலங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளதால் முதியவர்கள், பெண்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை