உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பதிவேடுகள் சரியாக பராமரிக்கவில்லை; தனியார் ஸ்கேன் சென்டருக்கு சீல்

 பதிவேடுகள் சரியாக பராமரிக்கவில்லை; தனியார் ஸ்கேன் சென்டருக்கு சீல்

கூடலுார்: கூடலுாரில் உள்ள, தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டரில், தவறுகள் நடப்பதாக நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை நலப்பணிகள் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சுகாதாரத்துறை நலப்பணி இணை இயக்குனர் ராஜசேகர் தலைமையில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமை டாக்டர் சுரேஷ் உள்ளிட்டோர் தனியார் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஸ்கேன் சென்டரை ஆய்வு செய்தனர். ஆய்வில், 'ஸ்கேன் சென்டர் பதிவேடுகள் முறையாக பராமரிக்கவில்லை,' என, தெரியவந்தது. தொடர்ந்து, அதிகாரிகள் ஸ்கேன் சென்டருக்கு 'சீல்' வைத்தனர். இது தொடர்பாக, சுகாதாரத்துறை சார்பில் கூடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீலகிரி மாவட்ட சுகாதார துறை நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜசேகர் கூறுகையில்,''தனியார் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டரை ஆய்வு செய்தபோது, அதன் பதிவேடுகள் சரியாக பராமரிக்கவில்லை என, தெரியவந்தது. தொடர்ந்து ஸ்கேன் சென்டருக்கு 'சீல்' வைக்கப்பட்டு, கூடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ