உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  அடிப்படை வசதிக்காக ஏங்கும் மறு குடியமர்வு கிராமங்கள்; பழங்குடியின மக்களுக்கு விடிவு எப்போது?

 அடிப்படை வசதிக்காக ஏங்கும் மறு குடியமர்வு கிராமங்கள்; பழங்குடியின மக்களுக்கு விடிவு எப்போது?

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றி மறு குடியமர்வு செய்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்க, நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன் தலைமையில் பழங்குடியின மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனு:- முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்காக வீச்சனாங்கொல்லி, சீரனாங்கொல்லி, மச்சிக்கொல்லி, பெண்ணை முள்ளன்வயல் உட்பட, 7 கிராமங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. இதனால், ஒரு சில பழங்குடியின மக்கள் மறு குடியமர்வு செய்யப்பட்ட இடத்தில் தங்காமல் மீண்டும் வனப்பகுதியை நோக்கி செல்கின்றனர். எனவே, மறு குடியமர்வு செய்த கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். குறிப்பாக, பழங்குடியின மக்களுக்கு வாரம் இருமுறை மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் நடமாடும் மருத்துவ வாகன வசதி ஏற்படுத்த வேண்டும். மாலை நேரத்தில் ஆட்டோவில் நடக்கும் மது விற்பனையை தடுக்க வேண்டும். போதை நீக்க மையம் தொடங்கி போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டும். இழப்பீட்டு தொகை: முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கிராம மக்களுக்கான இழப்பீட்டு தொகையை, 15 லட்சமாக உயர்த்த வேண்டும். ஈச்சனாங்கொல்லி குடியிருப்பிற்கு மின்சார இணைப்பு பணிகள் பாதியில் நிற்கிறது. மச்சிக்கொல்லி பேபி நகர் செல்லும் பாதை மோசமாக உள்ளது. குனில் வயலில் பழங்குடியின மக்களுக்கு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்து உள்ளது. பெண்ணை பழங்குடி குடியிருப்பில் அரசு ஆரம்பப் பள்ளி கட்டடம் கட்ட அரசு நிலம் எஸ்டேட் நிலம் அல்லது வன நிலம் ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை