உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  போதையில்லாத சமுதாயம் வேண்டும்; சத்யசாய் வேலைவாய்ப்பு முகாமில் அழைப்பு

 போதையில்லாத சமுதாயம் வேண்டும்; சத்யசாய் வேலைவாய்ப்பு முகாமில் அழைப்பு

குன்னுார்: குன்னுார் அருகே, சாய் நிவாஸ், ஸ்ரீசத்ய சாய் மாருதி சேவா அறக்கட்டளை மற்றும் பிரொபைல் எஸ்.ஆர்., நிறுவனம் சார்பில், உபதலை கிராமத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமை மாதா சாய் யசோதாமா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 70க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில், 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இளைஞர் மற்றும் இளம் பெண்கள் தங்கள் படிப்பு, திறமைகள் குறித்து நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் நேர்முகதேர்வு நடத்தினர். தொடர்ந்து நடந்த நியமன கடிதம் வழங்கும் நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த ஆனந்த குரு மேகநாத் பேசுகையில்,''தற்போது, 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு நேரடியாக அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்புகள் மீண்டும் ஏற்படுத்தி, படித்த மற்றும் திறமையுள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பை சிறந்த முறையில் உருவாக்கி தருவது நமது லட்சியம். இளைய தலைமுறை இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மது மற்றும் போதை இல்லாத இளைய சமுதாயத்தை உருவாக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் நடக்கும் இது போன்ற முகாம்களில் இளைய தலைமுறையினர் பங்கேற்று பயன்பெற வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்புகளை உருவாக்கி தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ