உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  புதர்கள் சூழ்ந்து காணப்படும் கிணறுகள்; சுகாதாரமற்ற குடிநீரால் நோய் அபாயம்

 புதர்கள் சூழ்ந்து காணப்படும் கிணறுகள்; சுகாதாரமற்ற குடிநீரால் நோய் அபாயம்

பந்தலுார்: பந்தலுார் அருகே பிதர்காடு பகுதியில், புதர்கள் சூழ்ந்து காணப்படும் குடிநீர் கிணறுகளால் சுகாதாரமற்ற குடிநீர் பருகும் நிலை தொடர்கிறது. நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிதர்காடு சந்தக்குன்னு, பதினெட்டுக்குன்னு கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், இரண்டு இடங்களிலும் குடிநீர் கிணறுகள் ஊராட்சி மூலம் அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிணறுகளை சுற்றிலும் புதர்கள் சூழ்ந்து, கிணறுகளை ஒட்டி பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டு, அந்த வழியாக எலி மற்றும் பூனை உள்ளிட்ட விலங்குகள் விழுந்து, தண்ணீர் மாசடைந்துள்ளது. மேலும், புதர்கள் சூழ்ந்து காணப்படுவதால், கிணற்று நீர் நோய்களை பரப்பும் தண்ணீராக மாறி, பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை சீரமைத்து தர பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தினால், ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ள மறுத்து வருகிறது. கிராம மக்கள் கூறுகையில்,'கிணறுகளை சுத்தம் செய்து குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தும் போது, ஊராட்சியில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. எனவே, அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி