மினி லாரி மோதி தம்பதி உயிரிழப்பு
புதுக்கோட்டை: மினி லாரி மோதி, பைக்கில் சென்ற தம்பதி உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே மூரியூரை சேர்ந்த விவசாயி பழனிகுமார், 42. அவரது மனைவி பழனிமுத்து, 40, இருவரும், நேற்று பைக்கில் ஆவுடையார்கோவிலில் இருந்து, மூரியூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, புண்ணியவயல் அருகே எதிரே களை எடுக்கும் வேலையாட்களை ஏற்றி வந்த பிக்கப் மினி லாரி மோதியதில், தம்பதி உயிரிழந்தனர். ஆவுடையார்கோவில் போலீசார், மினி லாரி டிரைவர் மனோஜ், 19, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.