| ADDED : நவ 14, 2025 04:17 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் அரண்மனை பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். முன்னதாக தி.மு.க., ஆட்சியில் ராமநாதபுரத்தில் எதுவும் நடைபெற வில்லை என்பது குறித்த மக்கள் பேட்டியுடன் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. மாநில பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பாலகணபதி, ராமநாதபுரம் மாவட்டப் பொதுச்செயலாளர்கள் குமார், சண்முகநாதன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க., த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.