உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரத்தில் சூறாவளிஒன்றுடன் ஒன்று படகுகள் மோதல்

 ராமேஸ்வரத்தில் சூறாவளிஒன்றுடன் ஒன்று படகுகள் மோதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதின. இதில் ஒரு படகு பலத்த சேதமடைந்தது. நேற்று முன் தினம் இரவு ராமேஸ்வரத்தில் வீசிய சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ரூபின் படகின் நங்கூரக் கயறு அறுந்து படகுகள் நிறுத்தும் பாலத்தின் மீது மோதின. இதில் படகின் பக்கவாட்டு பலகை உடைந்து பலத்த சேதம் ஏற்பட்டது. நேற்று காலை சேதமடைந்த படகு கரையில் ஏற்றப்பட்டது. இந்த படகை புதுப்பிக்க ரூ.பல லட்சம் செலவாகும். இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சேசு கூறியதாவது: திடீரென வீசிய சூறாவளியால் படகு பலத்த சேதமடைந்து. இதனை புதுப்பிக்க படகு உரிமையாளருக்கு ரூ. 8 லட்சம் செலவாகும். தமிழக அரசு இழப்பீடு தொகையை படகு உரிமையாளருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் படகு உரிமையாளர் குடும்பத்தினர் கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ