உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தனுஷ்கோடி - கோவை விழிப்புணர்வு பயணம்

 தனுஷ்கோடி - கோவை விழிப்புணர்வு பயணம்

ராமேஸ்வரம்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வலியுறுத்தி தனுஷ்கோடி முதல் கோவை வரை சமூக ஆர்வலர் விஷ்ணராம் 50, சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை துவக்கினார். கோவையை சேர்ந்தவர் விஷ்ணுராம். சமூக ஆர்வலரான இவர் சைக்கிளில் கோவை, கன்னியாகுமரி மற்றும் கோவை, திருச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விழிப்புணர்வு பிரசார பயணம் செய்துள்ளார். இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்தவும், சைபர் குற்றங்களில் இருந்து பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். போதை பொருளுக்கு குட்பை சொல்ல வேண்டும் என வலியுறுத்தி நேற்று தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து கோவை வரை சைக்கிளில் விழிப்புணர்வு பிரசார பயணத்தை துவக்கினார். இதனை ராமநாதபுரம் போலீஸ் எஸ்.பி., சந்தீஷ் துவக்கி வைத்து, விஷ்ணுராமுடன் சிறிது துாரம் சைக்கிளில் சென்றார். இவர் ராமநாதபுரம், மதுரை, தேனி வழியாக 500 கி.மீ., சைக்கிளில் தொடர்ந்து பயணித்து இன்று (டிச., 7) கோவை செல்ல உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை