உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முறிந்து விழும்நிலையில் உள்ள மரக்கிளைகளால் ஆபத்து; விபத்திற்கு முன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா

முறிந்து விழும்நிலையில் உள்ள மரக்கிளைகளால் ஆபத்து; விபத்திற்கு முன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா

வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலை முதல் தெருக்கள் வரை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழையுடன் பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்தன. மாவட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதில் பெரும்பாலான மரங்கள் பட்டுப்போன மரங்களாக உள்ளன. அதே போல் மரத்தின் கிளைகள் பாதி முறிந்தவாறு பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் மக்கள் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 மரங்கள் விழுந்துள்ளன. மக்கள் அதிகம் வந்து செல்லும் கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் பட்டுப்போன மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துராம் கூறியதாவது: ராமநாதபுரம் நகராட்சியில் மரக்கிளைகள் அவ்வப்போது முறிந்து விழுகின்றன. இதனால் ரோட்டில் நடந்து செல்வதற்கு பயமாக உள்ளது. அதிலும் பட்டுப்போன மரங்களை நீண்ட காலமாக அப்புறப்படுத்தாமல் இருப்பதால் சிறிய மழைக்கு முறிந்து விழுகின்றன. ஒவ்வொரு முறையும் மின்கம்பி அருகே செல்லும் மரக்கிளையை அப்புறப்படுத்த நகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவிப்போம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மரங்கள் விழுந்த பிறகு தான் வந்து அகற்றுகின்றனர். அடுத்த மழை வருவதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முறிந்த நிலையில் காணப்படும் மரங்கள் மற்றும் கிளைகளை அகற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை