உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  இருவேலியில் வரத்து பாலம்

 இருவேலியில் வரத்து பாலம்

சாயல்குடி: சாயல்குடி பெரிய கண்மாயிலிருந்து இருவேலி வரத்து கால்வாய் வழியாக எம்.ஜி.ஆர்., ஊருணி சந்தன மீரா ஓடை வழித்தட பகுதி நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பால் சுருங்கிய நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக புதிய வரத்து பாலம் அமைக்கப்பட்டது. தன்னார்வலர்கள் கூறியதாவது: சாயல்குடி பெரிய கண்மாயில் இருந்து வரக்கூடிய உபரி நீர் இருவேலி தடுப்பணையில் இருந்து 40 முதல் 60 அடி அகலத்திற்கு நீர் வழித்தடம் தற்போது நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. வழித்தடத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பு மிகுதியாக உள்ளது. சீமைக் கருவேல மரங்களின் தாக்கத்தால் மழை காலங்களில் தண்ணீர் வழிந்தோடுவதற்கு வழி இன்றி உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குறிப்பிட்ட இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி அப்பகுதியில் சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதிகளும் சிறு பாலம் அமைக்கும் பணி நடக்கிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ