உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கடலாடி நகர் வர்த்தகர் சங்க கூட்டம்

 கடலாடி நகர் வர்த்தகர் சங்க கூட்டம்

கடலாடி: கடலாடியில் நகர் வர்த்தகர் சங்க கூட்டம் நடந்தது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கடலாடி நகர் தலைவராக கோட்டைச்சாமி, செயலாளராக மாயக்கண்ணன், பொருளாளராக ராஜ்குமார், கவுரவ தலைவராக ராமலிங்கம், துணைத் தலைவராக மூர்த்தி, துணைச் செயலாளராக கார்த்தி, ஆலோசகர்கள், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடலாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடத்தை கட்ட வேண்டும். கடலாடி அரசு தாலுகா மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர், செவிலியர், மருத்துவ பணியாளர்கள் பணியிடத்தை நிரப்ப வேண்டும். கடலாடி தேவர் சிலை முதல் பஸ்டாண்டு வரை பேவர் பிளாக் சாலை மற்றும் எம்.ஜி.ஆர்., சிலை முதல் பஜார், அரசு மேல்நிலைப்பள்ளி நிறுத்தம் வரை புதிய தார் சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி