உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பள்ளியில் சட்ட விழிப்புணர்வு

 பள்ளியில் சட்ட விழிப்புணர்வு

கடலாடி: கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் போதைப்பொருட்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பாஸ்கர் தலைமை வகித்தார். கடலாடி சட்டப் பணிகள் குழு தலைவர் நீதிபதி சாது சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சட்ட விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. வழக்கறிஞர் சக்திவேல், உதவி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி பங்கேற்றனர். ஏற்பாடுகளை சட்ட தன்னார்வலர் கமலா தேவி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி