உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ஆடு திருடிய மதுரை தம்பதி மானாமதுரையில் கைது: கார், நம்பர் பிளேட்டுகள் பறிமுதல்

 ஆடு திருடிய மதுரை தம்பதி மானாமதுரையில் கைது: கார், நம்பர் பிளேட்டுகள் பறிமுதல்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியில் ஆடு திருடிய மதுரை தம்பதியை மானாமதுரை போலீசார் பிடித்து எமனேஸ்வரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பரமக்குடி எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோவில் மேலத் தெருவை சேர்ந்தவர் சரசு 50. இவர் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் அம்மன் கோயில் மற்றும் மாமாங்க தெப்பக்குளம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மதியம் 1:00 மணிக்கு ஆடுகளை சரி பார்த்த போது 5 ஆட்டுக் குட்டிகள் காணாமல் போனது தெரிந்தது. எமனேஸ்வரம் போலீசில் புகார் அளித்தார். திருடிய ஆடுகளுடன் மானாமதுரை வழியாக ஒரு கார் செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. மானாமதுரையில் தேவர் சிலை அருகே காரை நிறுத்தி விட்டு தம்பதியர் தப்பி ஓட்டம் பிடித்தனர். அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அவர்களை விரட்டிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், மதுரை ஆண்டார் கொட்டாரம் ஊராட்சி அய்யனார் நகரை சேர்ந்த தம்பதிகள் காளீஸ்வரன் 36, முத்துமாரி 35, என தெரிந்தது. இருவரையும் எமனேஸ்வரம் போலீசார் கைது செய்தனர். காரில் இருந்த 5 ஆடுகளை மீட்டு, கார் மற்றும் அதில் இருந்த இரண்டு போலி நம்பர் பிளேட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது பரமக்குடி மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆடு திருடிய வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை