உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மழைநீர் வடியாததால் நோயாளிகள் அவதி

 மழைநீர் வடியாததால் நோயாளிகள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்தவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்குவதால் நோயாளிகள் அவதியடைகின்றனர். மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் தரைதளம் அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் குழாய் பதிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக பள்ளம் தோண்டி சரியாக மூடப்படாமல் உள்ளது. மழை நேரங்களில் தாழ்வான பகுதிகளிலும், பள்ளத்திலும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் பள்ளம் இருப்பது தெரியாததால் நோயாளிகள் கீழே விழுகின்றனர். மருத்துவமனைக்கு நோயாளியை பார்க்க வந்த இடத்தில் கீழே விழுந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவமனை வளாகத்தை சுற்றி பாதுகாப்பாக நடப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்ல பேட்டரி வாகனம் அடிக்கடி இயக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ