உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  உரம் மூடைகள் தடையின்றி கிடைக்க தாசில்தாரிடம் மனு

 உரம் மூடைகள் தடையின்றி கிடைக்க தாசில்தாரிடம் மனு

முதுகுளத்துார்: முதுகுளத்தூர் வட்டாரத்தில் உரம் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் தாசில்தாரிடம் மனு அளித்தனர். முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விதைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு அவ்வப்போது பெய்த மழையால் பயிர்கள் நன்கு முளைக்க தொடங்கியது. தற்போது விவசாயிகள் களை எடுத்தல், உரம் இடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு இல்லாமல் விவசாயிகள் அலைகழிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. முதுகுளத்துார் வட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வரும் நிலையில் உர மூடைகள் கிடைக்காமல் நெல் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தினந்தோறும் உரம் மூடை வாங்குவதற்கு அலைகின்றனர். முதுகுளத்துார் பகுதியில் உர மூடைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தாசில்தார் கோகுல்நாத்திடம் முன்னாள் வெங்கலக்குறிச்சி ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ