உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு

 கர்ப்பிணிகள் அலைக்கழிப்பு

கீழக்கரை: கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகே மலேரியா கிளினிக் அமைந்துள்ள வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் கர்ப்பிணிகள் சிறப்பு பரிசோதனை செய்வதற்காக வருகின்றனர். இவர்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லை. அருகில் நுாறாண்டு பழைய மலேரியா கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. அங்கு அமர்வதால் ஆபத்து காத்திருக்கிறது. தன்னார்வலர் சிவராமலிங்கம் கூறியதாவது: கீழக்கரை நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் கர்ப்பிணிகள் இங்கு வரவழைக்கப்படுகின்றனர். போதிய இருக்கைககள் இல்லாததால் சிரமப்படுகின்றனர். ஊட்டச்சத்து பெட்டகம் முறையாக வழங்கப்படாத நிலை உள்ளது. குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை