சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் செல்லுார் பகுதியை சேர்ந்த தர்மசேனன் மகன் விஜய் 21. இவர் 2023 ஏப்.,24ல் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயதுள்ள இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.கீழத்துாவல் போலீசார் விஜயை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. விஜய்க்கு போக்சோ சட்டப்பிரிவில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதம் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். கொலை மிரட்டலுக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கீதா ஆஜரானார்.