உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  போலி பட்டா மூலம் நிலம் அபகரிப்பு சோடனேந்தல் கிராம மக்கள் புகார்

 போலி பட்டா மூலம் நிலம் அபகரிப்பு சோடனேந்தல் கிராம மக்கள் புகார்

ராமநாதபுரம்: கமுதி தாலுகா அபிராமம் அருகே சோடனேந்தல் கிராமத்தில் சிலர் போலி பட்டா தயாரித்து சுடுகாடு, விளைச்சல் நிலங்களை அபகரித்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சோடனேந்தல் கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தனர். இதில், சோடனேந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பொது சுடுகாடு ஆகியவற்றை அதிகாரிகள் உடந்தையுடன் தனியார் பெயருக்கு போலியாக பட்டா மாற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்து விவசாய நிலங்கள், பொது சுடுகாட்டை மீட்டுத்தர வேண்டும். போலி பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை