உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மகளிர் உரிமைத்தொகை கூடுதல் பணிச்சுமையால் சிரமம்; புள்ளியியல் அலுவலர்கள் குற்றச்சாட்டு

 மகளிர் உரிமைத்தொகை கூடுதல் பணிச்சுமையால் சிரமம்; புள்ளியியல் அலுவலர்கள் குற்றச்சாட்டு

ராமநாதபுரம்: மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை கள ஆய்வு செய்யும் கூடுதல் பணிச்சுமையால் புள்ளியியல் துறை அலுவலர்கள் சிரமப்படுகின்றனர். திரும்ப திரும்ப கூடுதலாக விண்ணப்பங்களை ஒதுக்கீடு செய்வதால் சென்ற இடங்களுக்கே மீண்டும் மீண்டும் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து சங்க மாநில தலைவர் பால்ஜெயக்குமார், பொதுச்செயலாளர் ரமேஷ் கூறியுள்ளதாவது: மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை வி.ஏ.ஓ.,க்கள் மூலம் ஆய்வு செய்து தகுதியுள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. தற்போது உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட 2 லட்சத்து 60 ஆயிரம் விண்ணப்பங்கள் புள்ளியியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவற்றை சில நாட்களில் முடிக்க கட்டாயப்படுத்துகின்றனர். சென்னையில் மட்டும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் வெளி மாவட்ட புள்ளியியல் துறை பணியாளர்கள் பலருக்கு அங்கு கள ஆய்வு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு சொந்த வீடு, நிலம், நான்கு சக்கர வாகனம், மாத சம்பளம், வருமான வரி போன்ற பல்வேறு விபரங்களை அறிந்து தகுதியுள்ளவர்களை இறுதி செய்ய வேண்டும். சில இடங்களில் அடிப்படை விபரங்கள் கூட இல்லாமல் இறந்து போனவர்களின் பெயரிலும் கூட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை சரி பார்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இப்பணியை மேற்கொள்ளாவிட்டால் பதவி உயர்வு வராதவாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிரட்டல் விடப்படுகிறது. வழக்கமான புள்ளியியல்துறை சார்ந்த பணிகளை நவ.,1 முதல் நிறுத்தி விட்டு சனி, ஞாயிறு நாட்களிலும் களப்பணி மேற்கொள்கின்றனர். சொற்ப விபரங்களை வைத்து சென்னை போன்ற பரிச்சயமில்லாத இடங்களில் எவ்வாறு பணியை மேற்கொள்ள முடியும். இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் துறையால் மிரட்டல் விடுப்பதால் உண்மையான நபர்களை உறுதி செய்வதில் தவறு நேர வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை