உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரத்தில் படகில் வீடு செல்லும் அவலம்

 ராமேஸ்வரத்தில் படகில் வீடு செல்லும் அவலம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் 2 நாட்களாக மழைநீர் வெளியேறாததால் வீடுகளுக்கு மக்கள் படகில் செல்லும் அவல நிலை உள்ளது. 'டிட்வா' புயலால் நவ. 28, 29ல் கனமழை பெய்ததால் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் 200 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பலரும் வீடுகளில் இருந்து பீரோ, பேன் உடைமைகளை லாரியில் ஏற்றி வெளியேறினர். 2ம் நாளான நேற்று ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவில் ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்களை வருவாய்துறையினர் வெளியேற்றி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள கோயில் விடுதியில் தங்க வைத்தனர். மேலும் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ராஜாநகரில் மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் உறவினர் வீட்டில் தங்கி இருந்த மக்கள் நேற்று தெர்ேமாகோல் படகில் சென்று வீடுகளை பார்வையிட்டு, முக்கிய ஆவணங்கள் உடைமைகளை சேகரித்து மீண்டும் உறவினர் வீடுகளுக்கு திரும்பினர். மழைநீர் செல்லும் வழித்தடங்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் உருவானதால் மழைநீரை வெளியேற்ற முடியாமல் நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் பெரிதும் சிரமப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை