மேலும் செய்திகள்
பைரவர் சன்னதிகளில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
14-Oct-2025
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல அபிேஷகங்கள் செய்தனர். *பரமக்குடி சிவன், முருகன் கோயில்களில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பரமக்குடி அருகே தீயனுார் கிராமத்தில் பைரவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் பஞ்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். *உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சன்னதி முன்புறம் ஷேத்திர காலபைரவர் தனி சன்னதியில் அருள்கிறார். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு மூலவர் ஷேத்திர காலபைரவருக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வெற்றிலை மாலை, செவ்வரளி பூக்கள் சாற்றப்பட்டது.உளுந்த வடை பிரசாதமாக படைக்கப்பட்டது. * சாயல்குடி அருகே மாரியூரில் பூவேந்தியநாதர் கோயிலில் காலபைரவர் சன்னதியில் மூலவருக்கு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் மாலை நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
14-Oct-2025