உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டியில் திருக்கார்த்திகை வினோத வழிபாடு

 கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டியில் திருக்கார்த்திகை வினோத வழிபாடு

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டியில் திருக்கார்த்திகை திருவிழாவை வினோதமான முறையில் கொண்டாடி வருகின்றனர். விவசாயம் செழிக்க வேண்டி பனை ஓலைகள் எரிக்கப்பட்டு அதன் துாசியை வயலில் துாவி வழிபாட்டில் ஈடுபட்டனர். கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நெல், பருத்தி,சோளம், மிளகாய், உளுந்து விவசாயம் செய்கின்றனர். பல தலைமுறைகளாக பாரம்பரியமாக திருக்கார்த்திகை திருவிழாவை வினோதமாக கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் பனை ஓலையை ஒன்றாக கட்டி ஊர்வலமாக கொண்டு சென்று விநாயகர் கோயில் அருகே தீ வைத்து ஒன்றாக எரிக்கின்றனர். இதில் உப்பு மிளகாய் போட்டு வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். கடைசியில் இருக்கும் கரி துாசியை எடுத்து சென்று விவசாய வயலில் துாவி வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர். இதனால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை. இந்த நடைமுறையானது பல தலைமுறைகளாக கிராமத்தில் கொண்டாடப்படுகிறது. முன்னோர் காலத்தில் சோளத்தட்டையில் தீயை வைத்து இவ்வாறு செய்து வந்ததாகவும், தற்போது சோளத்தட்டை கிடைக்காததால் பனை ஓலை பயன்படுத்துவதாக மக்கள் கூறினர். இந்த நடைமுறையானது கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி கிராமத்தில் மட்டுமே பாரம்பரியமாக நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ