உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வாகனங்கள் டிச.17ல்  ஏலம் 

 வாகனங்கள் டிச.17ல்  ஏலம் 

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மது விலக்கு போலீசாரால் கடத்தலின் போது பறி முதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச., 17ல் பி 1 போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் ஏலமிடப் படவுள்ளது. ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் உத்தரவுப்படி மது விலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 58 வாகனங்கள் ராமநாதபுரம் பி.1 போலீஸ் ஸ்டே ஷனில் டிச.,17 காலை 10:00 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது. பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு டிச.,16க்குள் முன் பதிவு செய்லாம். பதிவு செய்யும் வாகனத்திற்கு முன் பணம் ரூ.2000 செலுத்த வேண்டும். ஏலத்தில் எடுக்கப்படும் வாகனங் களின் தொகைக்கு அரசின் ஜி.எஸ்.டி., வரி தனியாக விதிக்கப்படும், என மதுவிலக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்