உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் ராணிப்பேட்டை எஸ்.பி., அய்மன் ஜமால் வழிபாடு

சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் ராணிப்பேட்டை எஸ்.பி., அய்மன் ஜமால் வழிபாடு

சோளிங்கர்: சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில், ராணிப்பேட்டை எஸ்.பி., அய்மன் ஜமால் சுவாமி தரிசனம் செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற யோக நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கார்த்திகை மாத பெருவிழா விமர்சையாக நடப்பது வழக்கம். கார்த்திகை மாதம் முழுதும், யோக நரசிம்மர் கண் திறந்து பக்தர்களுக்கு காட்சி வழங்குவதாக ஐதீகம். இதையொட்டி சோளிங்கர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே யோக நரசிம்மர் கோவிலில், ராணிப்பேட்டை எஸ்.பி., அய்மன் ஜமால் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பட்டர்கள் அவருக்கு பிரசாதம் வழங்கினர். பின், கோவிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ