மேலும் செய்திகள்
தி.மு.க., அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
16 hour(s) ago
சேலம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் விளக்கு ஏற்று-வது தொடர்பாக, மதுரை கிளை உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்-காத, தி.மு.க., அரசை கண்டித்து, சேலம் தாதகாப்பட்டி கேட் பஸ் ஸ்டாப்பில், இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை, 4:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில பொதுச்செயலர் கி ேஷார்குமார் தலைமை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், பா.ஜ., சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத் உள்பட, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், பக்தர்கள், தி.மு.க., அர-சுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கிடை-யாது என கூறி, அங்கிருந்த, 200க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச்சென்-றனர். பின் மாலையில் விடுவித்தனர்.
16 hour(s) ago