உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாய்க்காலில் கார் கவிழ்ந்து மூதாட்டி பலி மூவர் படுகாயம்

வாய்க்காலில் கார் கவிழ்ந்து மூதாட்டி பலி மூவர் படுகாயம்

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அருகே, ஏரி வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்தில், மூதாட்டி பலியானார்.நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பழையபாளையத்தை சேர்ந்தவர் கண்ணன், 60; ஓய்வு கண்டக்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, மனைவி பாரதி, 55, மகன் மற்றும் மாமியார் மாராயி, 78, ஆகியோருடன், காரில் நாமக்கல்லில் நடந்த உறவினரின் திருமணத்திற்கு சென்றனர். காரை, கண்ணன் ஓட்டினார்.பழையபாளையம் அருகே, ஒரு வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார், பழையபாளையம் ஏரி உபரிநீர் செல்லும் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில், கண்ணனின் மாமியார் மாராயி உயிரிழந்தார். படுகாயமடைந்த, மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை