உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இனக்கவர்ச்சி பொறி மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்

இனக்கவர்ச்சி பொறி மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்

பனமரத்துப்பட்டி, 'அட்மா' திட்டத்தில் சிறந்த வேளாண் தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்த பண்ணை பயிற்சி வகுப்பு, நிலவாரப்பட்டியில் நேற்று நடந்தது.பனமரத்துப்பட்டி 'அட்மா' குழு தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய, பூச்சியியல் வல்லுனர் ரவி, நெற்பயிரில் பூச்சி நோய் மேலாண்மை கட்டுப்பாடு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். 'அட்மா' வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா, பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்த வேண்டும் என, விளக்கினார்.சேலம் உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் நிறைமதி, உதவி வேளாண் அலுவலர் நந்தகுமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரேணுகா உள்பட பலர் பங்கேற்றனர்.மேலும் விவசாயிகளுக்கு மண்புழு உர படுக்கை, பழச்செடி தொகுப்பு நொச்சி, ஆடாதொடா உள்ளிட்டவை வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை