சேலம்: சேலத்தில் புதுப்பிக்கப்பட்ட, 'மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்' ேஷாரூமை, அமைச்சர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். இதை முன்-னிட்டு வரும், 16 வரை, தங்கத்தின் எடையில் பாதி அளவுக்கு, வெள்ளி நாணயம் இலவசம் என சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.'மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்' நிறு-வனம், தமிழகத்தில், 32 ேஷாரூம்கள், 14 நாடு-களில் 425 ேஷாரூம்களுடன், தங்க நகைகள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நி-லையில் சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பிரமாண்ட மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ேஷாரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. அதில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸின் தமிழக மண்டல தலைவர் யாசர், மண்டல வணிக தலைவர் சபீர் அலி, மேற்கு மண்டல தலைவர் நவுஷாத், சேலம் கிளை தலைவர் முக-மது அஷ்ரப் முன்னிலையில், தமிழக சுற்றுலாத்-துறை அமைச்சர் ராஜேந்திரன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.இதுகுறித்து மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தினர் கூறியதாவது: எங்-களிடம் விற்கப்படும் அனைத்து நகைகளிலும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, சேதாரம், கற்களுக்கான எடை, அதன் விலை விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்-ளன. வாடிக்கையாளர்கள், விருப்பமான நகையை எளிதாக தேர்வு செய்ய முடியும். இங்கு வாங்கும் நகைகளுக்கு ஆயுள் முழுதும் பராம-ரிப்பு இலவசம். திறப்பு விழா சலுகையாக வரும் டிச., 16 வரை, நகைகள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், தங்கத்தின் எடையில் பாதி அளவு எடைக்கு வெள்ளி நாணயம் இலவச-மாக வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.