மேலும் செய்திகள்
மர்ம விலங்கு கடித்ததில் பசு மாடு, 3 கன்றுகள் பலி
13-Apr-2025
மேட்டூர், மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சி, மேல் காளிகவுண்டனுாரை சேர்ந்த விவசாயி சிவானந்தத்தின் இரு வளர்ப்பு நாய்களை, கடந்த, 4 இரவு மர்ம விலங்கு கடித்து காயப்படுத்தியது. தொடர்ந்து அருகே உள்ள அரசமரத்துார் விவசாயி குப்புசாமி வளர்ப்பு நாயை, கடந்த, 7 இரவு மர்மவிலங்கு கடித்து துாக்கிச்சென்றது. அந்த விலங்கு சிறுத்தையாக இருக்கலாம் என, மக்கள் கூறியதால், வனத்துறை சார்பில் சிவானந்தம் வீடு, குப்புசாமி வீடு அருகே மர்ம விலங்கு நடமாட்டத்தை கண்காணிக்க, 10 கேமராக்களை பொருத்தினர். 8ல் வன எல்லை மற்றும் சிவானந்தம் வீடு அருகே என இரு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. இரு நாட்களாக, அருகே உள்ள வனப்பகுதியை, அதன் ஊழியர்கள், இரவில் ட்ரோன் மூலம் கண்காணித்தனர். எனினும் இதுவரை மர்மவிலங்கு தென்படாததால், டேனிஷ்பேட்டை வன ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
13-Apr-2025