| ADDED : டிச 02, 2025 02:25 AM
ஓமலுார்,கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழுங்க காருவள்ளி, சின்னத்திருப்பதி பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று நடைபெற்றது.காருவள்ளி சின்னத்திருப்பதியில் அமைந்துள்ள, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் கடந்த, 2008ல் கும்பாபி ேஷகம் நடந்தது. பின்னர் கருங்கல் தரைத்தளம் பதித்தல், மூலவர், ராஜகோபுரங்களுக்கு புதிய வண்ணம் தீட்டுதல், சுற்றுச்சுவர் புனரமைத்தல் என, ஒன்றரை ஆண்டுக்கு முன் திருப்பணிகள் துவங்கின.இந்நிலையில் நேற்று காலை, 10:15 மணிக்கு மூலவர், ராஜகோபுரம் ஆகியவற்றிக்கு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபி ேஷகம் செய்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா என முழக்கமிட்டனர். காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள், புனித நீரை வாகனம் மூலம் பத்கர்கள் மீது தெளித்தனர். மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஓமலுார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,மணி, சேலம் மேற்கு பா.ம.க., எம்.எல்.ஏ.,அருள் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர். கும்பாபி ேஷகத்தை, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பார்த்தனர். 140 போலீசார், 54 கண்காணிப்பு மேராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இரவு பெருமாள் உபய நாச்சியாருடன் புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா நடந்தது.