உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேற்றில் சிக்கிய தனியார் பள்ளி வாகனம்: தப்பிய 30 மாணவர்கள்

சேற்றில் சிக்கிய தனியார் பள்ளி வாகனம்: தப்பிய 30 மாணவர்கள்

ஆத்துார், ஆத்துார் அருகே, சேற்றில் சிக்கிய தனியார் பள்ளி வாகனத்தை, பொக்லைன் உதவியுடன் மீட்டனர்.ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து வருகிறது. இதனால் தாண்டவராயபுரம், நரசிங்கபுரம் என இரு வழிகளில், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தாண்டவராயபுரம் முதல் பழனியாபுரி வரையிலான சாலை, மண் சாலையாக காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், இந்த சாலை சேறும், சகதியுமாக உள்ளது.அக்கிசெட்டிபாளையம், அழகாபுரம், சொக்கநாதபுரம், பழனியாபுரி பகுதியில் இருந்து நேற்று, 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருடன், செல்லியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி (ஏ.இ.டி.,) பஸ் வந்து கொண்டிருந்தது. பழனியாபுரி சாலை பகுதியில் வந்தபோது, எதிரே வந்த பைக்கிற்கு வழி விட டிரைவர், பஸ்சை திருப்பியபோது, சாலையோர மண் பகுதியில் இறங்கியது. அந்த பஸ், கவிழும் சூழல் இருந்ததால் மாணவ, மாணவியரை பாதுகாப்பாக இறக்கி விட்டனர். பொக்லைன் உதவியுடன், சேற்றில் சிக்கிய பள்ளி பஸ்சை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை