உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம்: சேலம் கோட்டை மைதானத்தில், ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். அதில், 2016க்கு முன், ஓய்வு பெற்ற ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதி-யர்களுக்கு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை மறு நிர்ணயம் செய்து, மத்திய அரசுக்கு இணையாக வழங்குதல்; இறந்த ஓய்வூ-தியரின் குடும்ப பாதுகாப்பு திட்ட நிதி, 50,000 ரூபாயை, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தல்; மத்திய அரசு உத்தரவின்படி, கடந்த ஜூலை, 1 முதல், 3 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்குதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.பின், கோரிக்கை மனு, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்-டது. மாவட்ட துணைத்தலைவர் நடராஜன், செயலர் தனசேகரன் உள்பட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !