ஐ.டி.ஐ., மாணவர்கள் இடையே விளையாட்டு போட்டி தொடக்கம்
மேட்டூர்: சேலம் மண்டலத்தில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணிகிரி மாவட்டங்களை சேர்ந்த, 13 அரசு, தனியார் ஐ.டி.ஐ., மாண-வர்கள், 450 பேர், மாணவியர், 200 பேர் பங்கேற்கும் இரு நாள் விளையாட்டு போட்டி, மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதா-னத்தில் நேற்று காலை தொடங்கியது. மேட்டூர் ஆர்.டி.ஓ., லோக-நாயகி(பொ) தொடங்கி வைத்தார். தொடர்ந்து போட்டிகளுக்கான கொடியை ஏற்றி, மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியா-தையை ஏற்றார்.இதையடுத்து மாணவர்கள் பங்கேற்ற கைப்பந்து, கால்பந்து, மட்-டைபந்து போட்டிகள், மாணவியர் பங்கேற்ற டென்னிஸ் போட்-டிகள் நடந்தன. காலை, 8:00 மணிக்கு தொடங்கி, மாலை, 5:30 மணி வரை நடந்தது. இரண்டாம் நாளாக இன்று ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படு-கின்றன. ஏற்பாடுகளை மேட்டூர் அரசு ஐ.டி.ஐ., முதல்வர், அலு-வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் செய்தனர்.