உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாவட்டத்துக்கு மூன்று சிறந்த பள்ளிகள் தேர்வு

மாவட்டத்துக்கு மூன்று சிறந்த பள்ளிகள் தேர்வு

சேலம், தமிழக தொடக்க கல்வித்துறையில் செயல்படும், துவக்க, நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை, கற்பித்தல் தரம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில், மாவட்டத்துக்கு, 3 சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு கேடயம் வழங்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.அதன்படி மாவட்டங்களில் தேர்வு குழு அமைக்கப்பட்டு, சிறந்த பள்ளிகள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. தற்போது சிறந்த பள்ளிகள் பட்டியலை, தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் மாவட்டத்துக்கு, 3 பள்ளிகள் வீதம், 38 மாவட்டங்களுக்கு, 114 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.சேலம் மாவட்டத்தில் இடைப்பாடி ஒன்றியம் மணியக்காரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி; சேலம் ஊரக ஒன்றியம், கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி; அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பள்ளிகளுக்கு வரும், 14ல், காரைக்குடி அழகப்பா மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் விழாவில் கேடயம் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி